SBI கார்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு: காத்திருக்கிறது ஏகப்பட்ட கேஷ்பேக், சலுகைகள்

Tue, 20 Jul 2021-6:40 pm,

நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு சோனி தயாரிப்புகளை வாங்கினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இதில், குறைந்தபட்ச பரிவர்த்தனை 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .4000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 2021 ஜூலை 31 வரை செல்லுபடியாகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்)

உங்களிடம் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இருந்தால், homecentre.in இல் நீங்கள் செய்யும் ஷாப்பிங்கில் 5% கேஷ்பேக் பெறலாம். இதற்கு குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .5000 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ 1000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 2021 ஆகஸ்ட் 15 வரை செல்லுபடியாகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்)

 

எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்கள் Dhani Pharmacy-யிலிருந்து வாங்கினால் 27 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையின் பயனை 5 செப்டம்பர் 2021 வரை பெறலாம் (புகைப்படம் - அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்)

 

நீங்கள் சூப்பர்டெய்லி மொபைல் செயலி மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு 27 செப்டம்பர் 2021 வரை கிடைக்கும். இதில், குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .2000 ஆக இருக்க வேண்டும். இதில், அதிகபட்சமாக ரூ .200 கேஷ்பேக் கிடைக்கும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்)

ஹோண்டா இரு சக்கர வாகனங்களை வாங்குவதிலுமம் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு கொண்டு ஈஎம்ஐ பரிவர்த்தனையில் ஹோண்டா 2 சக்கர வாகனங்களை வாங்கினால், உங்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .40000 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .3500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை 2021 ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link