ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் விஷயங்கள்

Fri, 13 Sep 2024-2:50 pm,

காதல் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும்போது இருவரும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என ஒரு சிலர் கூறக்கேட்டிருப்பீர்கள். உண்மையில் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

குறிப்பாக ஒருசில விஷயங்களை எப்போதும் தன் காதலருடன் பகிர்ந்து கொள்ளவே மாட்டார். அது எதற்காக என்றால் இப்போது இருக்கும் உறவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே. 

பெண்கள் தங்கள் முன்னாள் காதலர்களைப் பற்றி தங்கள் பார்ட்னருடன் பேச விரும்புவதில்லை. கடந்த கால நினைவுகள் தொந்தரவு செய்வதால், முடிந்தவரை தன் முன்னாள் காதலர் பற்றி பார்ட்னருக்குத் தெரியக்கூடாது என்று பெண்கள் விரும்புவார்கள்.

 

பாய் பெஸ்டி, அதாவது பெண்களுக்கு இருக்கும் நெருக்கிய தோழர்கள். அவர்கள் குறித்து காதலர் அல்லது கணவரிடம் பெண்கள் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் பாய் பெஸ்டியுடனான உறவை கணவர் நிறுத்திவிடுவாரோ என்ற பயம் பெண்களுக்கு இருக்கும்.

 

எவ்வளவு அன்பாக காதலன் மீது ஒரு பெண் இருந்தாலும், அவளுக்கு இன்னொரு ஆண் மீதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அதனை எந்த சூழலிலும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளவேமாட்டார். 

குடும்ப உறுப்பினர்கள் பற்றி செய்திகளை கணவர் அல்லது காதலரிடம் பெண்கள் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் குடும்ப உறுப்பினரின் மரியாதை கெட்டுவிடும் என்பதால் இதனை செய்ய விரும்பமாட்டார்கள். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link