சம்மரில் சில்லுனு ஒரு வெயிட் லாஸ் டிப்ஸ்: இந்த சின்ன விதைகளில் இருக்கு எடை இழப்பு ரகசியம்
கோடையில் எடை இழக்க நமது வழக்கமான உணவுகளுடன், சில விதைகளையும் சேர்த்துக்கொண்டால், உடல் எடையை எளிதாக குறைக்கலாம். எனினும், இந்த விதைகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். நாம் எதை புதிதாக உட்கொண்டாலும், அவை நம் உடல் நிலைக்கு சரியானதாக இருக்குமா என்பதை தெரிந்துகொண்டு சரியான அளவில் உட்கொள்வது நல்லது.
சில விதைகளை உட்கொள்வதால் சில நாட்களின் நமது உடல் எடை குறைந்துவிடும். தொப்பை கொழுப்பும் மறைந்துவிடும். அத்தகைய விதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சியா விதைகள்: உடல் எடையை குறைக்க, சியா விதைகளை தயிரில் ஊறவைத்து அல்லது நீரில் ஊறவைத்து தயிருடன் கலந்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கும். இது ஆரோக்கியமற்ற பசி ஏற்படாமல் தடுக்கின்றது.
தர்பூசணி விதைகள்: தர்பூசணி ஒரு கோடைகால பழமாகும். இது இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுத்து நீர்ச்சத்தை அளிக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் உதவுகின்றது. எனினும், மக்கள் பெரும்பாலும் இதன் விதைகளை துப்பி விடுகிறார்கள். ஆனால் தர்பூசணி விதைகளில் புரதம், துத்தநாகம், வைட்டமின், மெக்னீசியம், தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதில் உள்ள எடை இழப்பு பண்புகள் உடல் பருமனை குறைக்க பெரிய அளவில் உதவும்.
ஆளி விதைகள்: ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆளி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக உள்ளன. ஆளி விதைகள், செரிமானத்தை சீராக வைத்திருக்கவும். வீக்கத்தைக் குறைப்பதற்கும், உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதற்கும் நல்லது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க இந்த விதைகள் மிகவும் பயனுள்லவையாக இருக்கும்.
சூரியகாந்தி விதைகள்: சூரியகாந்தி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது எளிதாகும். இதனுடன், இது உங்கள் குடல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சூரியகாந்தி விதைகளை உங்கள் உணவில் சூப், டீ அல்லது ஏதேனும் பானத்தில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
விதைகள்: இந்த விதைகளில் சிலவற்றை அப்படியே உட்கொள்ளலாம். சிலவற்றை ஊற வைத்தும், சிலவற்றை பொடி செய்து பிற உணவுகளில் சேர்த்தும் உட்கொள்ளலாம். இவை உடல் எடையை அதிகரிப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.