பணவரவால் பரவசமடையப்போவது யார்? இது செப்டம்பர் மாத நியூமராலஜி ராசிபலன்!
எண் கணிதத்தின் அடிப்படையில் இந்த மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்
வாழ்க்கை அன்பால் நிறைந்தது என்று தோன்றும் அளவுக்கு நல்ல ஆக்கப்பூர்வமான எண்ணங்களால் மனம் கமிழும். பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், பட்ஜெட் போட்டு செலவு செய்தால் கவலை இருக்காது. செப்டம்பர் மாதம் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும்
உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு பல விஷயங்கள் நடந்தேறும். மன உலைச்சல்அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதற்குப் பதிலாக, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது
பலவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் மூன்றாம் எண் நபர்கள், தற்போது ஒரு சிறிய பிரச்சனைக்கும் டென்ஷன் ஆகும் நேரமாக இருக்கும். ஆனால், எவ்வளவு கோபப்பட்டாலும், அதனை சரியாக சமாளிக்கும் திறமையும் இருப்பதால், நிலைமை மோசமாகாது. அனுபவங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதை புரிந்துக் கொண்டால் நிம்மதி கிடைக்கும்
பொறுமையாக இருப்பது என்றும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், அதில் பிறர் தலையிடுவதை தவிர்க்கவும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருக, மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
கடின உழைப்பு பலன் தரும் என்பதை உணர்ந்த நான்காம் எண் நண்பர்கள், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நட்பு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றாலும் குடும்பத்தினருக்கும் அதே அளவு மரியாதை கொடுத்தால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது, கவனக்குறைவால் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
விரைவாக முடிவுகளை எடுத்தால், இலக்கை சரியான நேரத்தில் அடைய முடியும். இந்த மாதம் பண வரவு அதிகரிக்கும், மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
செப்டம்பர் தொடக்கத்தில் பெரிய வெற்றியை அடையும் ஏழாம் எண் அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரம் வலுவாக இருக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்
செப்டம்பர் மாதம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமானதாக இருக்கும். எட்டாம் எண்ணில் பிற்ந்தவர்களின் பணிக்கு பாராட்டு வந்து குவியும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்
பொருளாதார விஷயங்களில் நேரம் சாதகமாக இருக்கும், ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு. செப்டம்பர் மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயம் மன அழுத்தம் அல்லது கவலையைக் கொடுக்கும்