தாம்பத்திய வாழ்க்கையில்... சுவையை கூட்டும் சில சூப்பர் மசாலாக்கள்
பாலியல் பிரச்சனை: உடல் பலவீனம், சோர்வு, அதீத சோர்வு அல்லது உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை ஆகியவை உங்கள் தாம்பத்திய உறவை பெரிதும் பாதிக்கும். நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவது பலவீனத்திற்கான முக்கிய காரணம்.
குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்க உதவும் சில மசாலாக்களை அறிந்து கொள்ளலாம்.
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சில குறிப்பிட்ட மசாலாக்களை வழக்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம், பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக வாழலாம்.
ஏலக்காய்: உடலின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களையும் வலுவடையச் செய்யும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பாலியல் திறனை மேம்படுத்தும் ஆற்றலும் ஏலக்காய்க்கு உண்டு.
வெந்தயம்: வெந்தயத்தில் சபோனின்கள் உள்ளன, அவை ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டுகின்றன. பாலினம் சார்ந்த பிரச்சனைகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு முக்கிய காரணமாகும்.
ஜாதிக்காய்: பாலியல் ஆசையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது ஜாதிக்காய் (Nutmeg). உடலுறவின் போது ஜாதிக்காய் மனதை அமைதிப்படுத்துகிறது.
இஞ்சி: இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் சக்தி கொண்ட இஞ்சி பாலியல் சக்தியையும் விருப்பத்தையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஜிஞ்சரால் என்ற கலவை அனைத்து உறுப்புகளுக்கும் ஆன இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பலவீனத்தை நீக்கி வலிமையைக் கொடுக்கிறது.
பூண்டு: பூண்டில் அதிக அளவு அல்லிசின் உள்ள நிலையில்,பாலியல் உறுப்புகளுக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பாலியல் பிரச்சனைகளை தீர்க்க உதவும். பாலியல் இச்சையை தூண்டும் திறனும் பூண்டிற்கு உண்டு.
இலவங்கப்பட்டை: பாலியல் ஆசையை அதிகரிக்க உதவும் ஒரு சுவையான மசாலாவான இலவங்கபட்டை, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முதல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பலவீனத்தை நீக்குவது வரை பல நன்மைகளை கொண்டது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.