ஷேன் வார்னின் அற்புதமான சாதனைத் தருணங்கள்
1999 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராக ஷேன் வார்னே இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆச்சரியம் தந்த அரையிறுதிப் போட்டியில் வார்ன் 4/29 என்ற புள்ளிகளுடன் முடித்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்ற ஆட்டத்தில் வார்னே 4/33 எடுத்தார். (Photograph:AFP)
700 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய உலகின் முதல் வீரர் ஷேன் வார்னே. தனது டெஸ்ட் வாழ்க்கையில் வார்னே 708 விக்கெட்டுகள்.எடுத்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்னேயும் ஒருவர், (Photograph:AFP)
1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்டில் ஷேன் வார்ன் 'நூற்றாண்டின் பந்து' என்ற சாதனையை படைத்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசுமரத்தாணி போல் நிலைத்திருக்கச் செய்த தருணங்களில் முக்கிய போட்டி இது. (Photograph:AFP)
1994 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) இங்கிலாந்துக்கு எதிராக ஷேன் வார்ன் தனது முதல் டெஸ்ட் ஹாட்ரிக் சாதனையை எடுத்தார். (Photograph:AFP)
2006 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில், ஷேன் வார்னேவின் பந்து வீச்சு, ஆஸ்திரேலியாவை படுதோல்வியில் இருந்து காப்பாற்றியது. பரபரப்பான ஆட்டத்தின் கடைசி நாளில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெறவும் ஷேன் வார்ன் தான் காரணம் என்பது வரலாறு சொல்லும் உண்மை.. (Photograph:AFP)