சதயத்தில் சனிப்பெயர்ச்சி! மார்ச் 14 முதல் குதூகலமாய் கொண்டாட்டம் போடப் போகும் 5 ராசிகள்
ஜோதிடத்தின் படி, இந்த நேரம் மிதுன ராசியினருக்கும் சாதகமாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க நேரம் சாதகமாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வாய்ப்புகல் திறக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறலாம்
கர்மக் காரகரான சனி பகவான், சதய நட்சத்திரத்திற்கு செல்வதால், 5 ராசிகளுக்கு நல்ல நேரம் பிறக்கும் என்றால், மற்ற ராசியினரில் சிலருக்கு மத்திம பலன்களும், சிலருக்கு மோசமான காலமாகவும் இருக்கும்
சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்திலும் வெற்றி உங்களுக்கே
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் சாதகமாக அமையப் போகிறது. வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்
சிம்மம் ராசியினருக்கு மார்ச் 15க்கு பிறகு கடின உழைப்பின் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடன்கலாகி வந்த வேலைகள் வேகம் பெறும். வேலைகள் சுமுகமாக நடைபெறும்
சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது மேஷம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரர்கள் செய்யும் முதலீடு பலன் தரும். மறுபுறம், புதிய தொழிலைத் தொடங்க சாதகமான நேரம். பொருளாதார நிலையில் வலுவாகும்.