ஷஷ யோகத்தால் அற்புதமான வாழ்க்கையைப் பெறும் ராசிகள்! சனீஸ்வரரின் ஸ்பெஷல் யோகம் யாருக்கு நல்லது?
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தரும் கிரகமான சனி பகவான் தற்போது கும்பத்தில் உச்சம் பெற்று, தனது சொந்த ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல வகையில் மாற்றங்கள் ஏற்படும்.
சனி தனது சொந்த உச்சத்தில் இருக்கும்போதோ அல்லது தனது ராசியில் இருக்கும்போது ஏற்படுவது ஷஷ யோகம். தற்போது உருவாகியுள்ள இந்த அரிய யோகத்தின் பலன்களை அனுபவிக்கும் ராசிகள் இவை தான்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்துக் கொண்டிருந்தாலும், ஷஷ யோகம் அவர்களுக்கு நன்மையைச் செய்யும். நின்று போயிருந்த வேலைகள் நட்ந்தேறும், தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்
பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விடும் காலம் வந்துவிட்டது மகர ராசியினரே. ஷஷ ராஜயோகத்தைக் கொடுக்கும் சனீஸ்வரர், மங்கு சனியாக வந்து உங்களுக்கு நன்மை செய்வார்
பணம் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் அகலும், பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, நிம்மதியாக இருக்க வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் அகலும்
கன்னி ராசியினரின் வாழ்க்கையில் இது நல்ல காலமாக இருக்கும். சனி பகவானின் ஷஷ யோகம் உங்களுக்கு ராஜ வாழ்க்கையைக் கொடுக்கும்
பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் நிவர்த்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வராது என்று நினைத்திருந்த சொத்து அல்லது பணம் வந்து சேரும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் ஷஷ யோகத்தின் பலன்களால் வாழ்க்கை வசந்தமாகும்
நீதி அரசராக இருந்து செயல்படும் சனீஸ்வரரின் உக்ரம், தவறுகளை சரி செய்வதற்கே என்பதையும், நாம் செய்த நன்மைகள் என்றும் நம்மை கைவிட்டுவிடாது என்பதையும் சனி, தனது செயல்களால் புரிய வைப்பார்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது