இரவு நேர செயற்கை ஒளிக்கும் Thyroid Cancer-க்கும் என்ன சம்பந்தம்? அதிர்ச்சியூட்டும் facts!!

Sat, 11 Sep 2021-7:18 pm,

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் நடுக்கம் கொள்கிறார்கள். புற்றுநோயின் பல கட்டங்கள் உள்ளன என்பதும் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எலும்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் போன்றவை சில பிரபலமான புற்றுநோய் வகைகளாகும்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு ஆன்லைன் ஆய்வில், இரவு நேரத்தில் செயற்கை ஒளிக்கு வெளிப்படுபவர்களுக்கு தைராய்டு புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில மார்பக புற்றுநோய்கள் தைராய்டு புற்றுநோயுடன் பொதுவான, ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், இரவு நேர செயற்கை வெளிச்சம் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிப்பதற்காக மட்டும் தனது கண்டுபிடிப்புகள் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஆய்வாளர் கியான் சியாவோ ஒரு பத்திரிகையில், இரவு நேர ஒளி வெளிப்பாட்டின் பங்கைப் பற்றியும், சர்க்காடியன் குறுக்கீட்டைப் பற்றியும் பார்க்கும்போதும், தங்கள் ஆய்வு, ஆய்வாளர்களுக்கு, இரவு நேர ஒளிக்கும் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கும் இடையிலான உறவை ஆராய உதவும் என்று நம்புவதாகக் கூறினார். 

 

அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பல தசாப்தங்களாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றும் 1970-க்குப் பிறகு தைராய்டு புற்றுநோய் பற்றி மிக அதிகமாகத் தெரிய வந்துள்ளது என்றும் இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் தைராய்டு புற்றுநோய்க்கான அனைத்து காரணங்களையும் அரிய பல வித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், இரவு பகல் என இந்த கால நேரங்களுக்கு முன்பு இருந்த வரையறுக்கப்பட்ட வேறுபாடுகள் இல்லாமல் போனதும் தைராய்ட் புற்றுநோய் அதிகரித்தமைக்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருகின்றனர். ஆனால் இவை மட்டும் இந்த நோய் அதிகரித்ததற்கான காரணமாக் இருக்காது என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.  

ஆய்வாளர்களின் கருத்துபடி, இரவு நேர செயற்கை ஒளி, இயற்கை மெலடோனை ஒடுக்குகிறது. இது ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டின் ஒரு மாடுலேட்டராகும். மிகக் குறைந்த மெலடோனின் செயல்பாடு, கட்டிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இரவு நேர செயற்கை ஒளி உடலின் சர்க்காடியன் சமன்பாட்டையும் சீர்குலைக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இது புற்றுநோய் ஆபத்து காரணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link