பகீர் தகவல்! ஸ்டார் ஹோட்டல்களில் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடப்பது என்ன
நீங்களும் ஹோட்டலை அடைந்தவுடனேயே மேசையில் வைக்கப்பட்டுள்ள ஒரு குவளையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், இனி அப்படி செய்யாதீர்கள். அறையை சுத்தம் செய்பவர்கள் வேலை பளுவின் காரணமாக, பல சமயங்களில் குளியலறையை சுத்தம் செய்யும் ப்ரெஷ்ஷை பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள். அவர்களுடையே ஒரே குறிக்கோள் பார்க்க பளிச்சென்று இருக்க வேண்டும் என்பது தான்.
5 ஸ்டார் ஹோட்டல்களில் அதிக மரணங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இவை வெளியே தெரிவதில்லை. இவை மூடி மறைக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருவர் இறக்கும் ஹோட்டல்கள் கூட உள்ளன என அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
எத்தனை விலை உயர்ந்த ஹோட்டலாக இருந்தாலும் முட்டை பூச்சிகள் இருப்பதற்காக வாய்ப்புகள் அதிகம். அதனால், உங்கள் பேக், பெட்டிகளை படுக்கையின் மீது வைக்க வேண்டாம்.
ஒரு முறை ஒரு ஷேக் ஒரு பாலியல் தொழிலாளியை ஹோட்டலுக்கு அழைத்து வந்ததாக ஒரு ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த பெண் ஷேக்கின் லட்சம் ரூபாய், விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை மனதில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை 5 நட்சத்திர அல்லது ஆடம்பர ஹோட்டல்களில் தங்கும் போது, இதனை மனதில் வைத்துக் கொள்ளவும்.