‘பாகுபலி’ கட்டப்பா நடிகர் சத்தியராஜ் மனைவி 4 வருட கோமா !! உருக்கத்துடன் மகள்..

Sat, 23 Nov 2024-4:10 pm,

பாகுபலியில் பிரபலமான கதாப்பத்திரம் கட்டப்பா, நடிகர் சத்தியராஜ் பெரிதாக தன் குடும்பங்கள் பற்றி ஊடகத்திலும், ஆடியோ வெளியீட்டிலும் பேசியதில்லை. சத்தியராஜ் மலையாள மண்ணில் பிறந்தாளும் தமிழ் மக்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

நடிகர் சத்தியராஜ்  1978யில் தமிழ் திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் படம் “ சட்டம் என் கையில்” இதில் இவரின் பெயர் ‘தேங்காய் ஸ்ரீனிவாசன்’வில்லனாக நடிக்கத் தொடங்கினார். 

1985ல் தமிழில் வெளிவந்த முதல் படம் சாவி, இதில் சத்யராஜ் முன்னணி கதாநாயகனாக  நடித்துள்ளார். மேலும் கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

70,80,90களில் நடித்து திரைத்துறையில் ஹிட்டான சத்தியராஜ் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமாக பாகுபலியில் நடித்துள்ளார். சத்தியராஜிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் திரைத்துறையில் பிரபலமான பிரபல நடிகை, நடிகர்களுடன் நடித்துள்ளார். சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு இந்திய ஊட்டச்சத்து நிபுணர். 

 

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா சத்யராஜ் பதிவிட்ட குறிப்பு அனைவரது மனதையும் உருக்கியது. சத்யராஜ் மனைவி கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாகவும், அம்மாவிற்கு  உணவு PEG டியூப் வழியாகக் கொடுக்கிறோம் என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

 

என் அப்பா, என் அண்ணன் மற்றும் நான் நாங்கள் மொத்தமாக இதனால் உடைந்துவிட்டோம்,  அம்மா குணமடைவார் என்று நாங்கள் அனைவரும் நம்பிக்கையாகக் காத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் “அம்மா திரும்பக் கிடைப்பார் என எங்களுக்குத் தெரியும். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அப்பா கடந்த 4 வருடங்களாக single parent ஆக இருந்து வருகிறார். நான் அப்பாவுக்கு single mom ஆக இருந்துவருகிறேன். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUBல் இருக்கிறோம் என்று இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link