இரண்டே நாள் வெயிட் பண்ணா போதும்! குதூகலத்தில் குத்தாட்டம் போட வைக்கும் சுக்கிரன் பெயர்ச்சி வந்தாச்சு...
கிரகங்களின் இயக்கத்தில் பல பெயர்ச்சிகள் நடைபெறும், ராசிப் பெயர்ச்சி, நட்சத்திரப் பெயர்ச்சி என எந்த பெயர்ச்சியாக இருந்தாலும், அவை மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அக்டோபர் ஐந்தாம் தேதியன்று நடைபெறவிருக்கும் சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்கு என்ன மாற்றம் ஏற்படும்? தெரிந்துக் கொள்வோம்...
செலவுகளால் சேமிப்புகள் குறையும் என்பதால் பண விஷயத்தில் கவனமாக செயல்படவும். பயனற்ற விவாதங்களால் மன உளைச்சல் ஏற்படும். ஆனால், பேச்சில் பணிவும் கனிவும் இருந்தால் பிரச்சனைகள் குறையும். தொழில்நுட்ப கருவிகளை மாற்ற வேண்டியிருக்கும். உடன்பி வேலை பார்ப்பவர்களிடம் அனுசரணையாக நடந்துக் கொள்வது நல்லது
புதிய முயற்சிகளை செய்ய ஏற்ற நேரம் இது. உடன்பிறந்தவர்கள் ஆதரவுடன் வேலைகளில் திறமையை வெளிப்படுத்த முடியும். விருப்பமான விஷயங்களை தைரியமாக செய்து முடிக்கும் காலம் இது. திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்
குடும்பத்தில் நெருக்கம் ஏற்படும். உறவுகளை பற்றிய அணுகு முறையில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பண வரவுகள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இருக்கும்.
புதிய தேடல்கள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். நீண்ட தூரம் பயணிக்க வாய்ப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். சக ஊழியர்களிடம் நல்லிணக்கம் உண்டாகும், புத்துணர்ச்சி உண்டாகும்.
அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும், வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் என்றாலும், திடீர் செலவுகள் கையை கடிக்கலாம். உழைப்புக்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை என்ற எண்ணம் தோன்றும். தொழில் செய்பவர்கள் ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்
கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் கிடைக்கும், வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும் என்றாலும் அதிலும் சில மன உளைச்சல்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
புதிய நபர்களின் அறிமுகம் மனதில் உற்சாகத்தை உண்டாக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும் என்பதால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அறிமுகமாகும் புதிய நபர்களின் ஒத்துழைப்பு வேலைகளை சுலபமாக்கும். கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து பிறரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. வித்தியாசமான அனுபவங்கள் அதிகரிக்கும். உறவுகள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிந்தித்துச் செயல்படவும்.
வேலை விஷயத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழும் காலம் இது. மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
பொறுப்புகள் அதிகரிக்கும், குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பிரச்சனைகள் குறையும் என்பதால் ஆசுவாசம் ஏற்படும். நெருக்கடி கொடுத்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் சிந்தனைகள் மேம்படும் காலம் இது
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது