எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!
Side Effects of Brinjal: கத்தரிக்காய் என்பது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆனால், சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.
கத்திரிக்காய் காயை அதிகமாக உட்கொள்வது பைல்ஸ் அல்லது மூல நோய் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, பைல்ஸ் நோயாளிகள் கத்தரிக்காயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற தனிமம் இருப்பதால், கல் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
வாயு பிரச்சனை அல்லது வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்று பிரச்சனையை அதிகரிக்கும்.
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கத்திரிக்காய் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கிறது. இது மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நீங்கள் எடை குறைக்கும் டயட்டைப் பின்பற்றுகிறீர்கள் என்றால், கத்தரிக்காயை குறைக்க வேண்டும். கத்தரிக்காயை சமைக்க எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.