மது அருந்துபவர்கள் கவனத்திற்கு! மது அருந்தினால் இந்த பாதிப்புகள் வரலாம்!
ஆல்கஹால் குடிப்பதால் வயிற்றில் அமிலங்களின் சுழற்சி அதிகரித்து வயிற்றுப்பகுதியில் எரிச்சல் ஏற்படும். பல வருடங்களாக மது அருந்துபவர்களுக்கு அல்சர் பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படும்.
நீங்கள் அதிகப்படியாக மற்றும் தினமும் மது அருந்தினால் உங்களுக்கு ரத்த அழுத்த அளவு அதிகரிக்கும், இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
அதிகளவில் மது அருந்தினால் கல்லீரலில் கொழுப்பு அதிகரிக்கும், இந்த கொழுப்பினால் உங்களுக்கு கல்லீரல் சம்மந்தமான நோய்கள் ஏற்படும்.
குறைந்த அளவில் ஆல்கஹால் குடிப்பது உங்களுக்கு ஓய்வளிக்கும் என்றாலும் அதிகப்படியான அளவு மது அருந்துவது கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
அதிகளவில் மது அருந்துவது உங்களுக்கு கற்றல் மற்றும் நினைவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான மது உங்களுக்கு டிமென்ஷியா நோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.