கூகுள் பே-ல் அனுப்பிய பணம் வரவில்லையா? உடனே இத பண்ணுங்க!
கூகுள் பே மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் பிக்சரை க்ளிக் செய்து, செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்ல வேண்டும்.
அதன் பின்னர் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள ஹெல்ப் மற்றும் ஃபீட்பேக் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.
இப்போது கான்டக்ட் சப்போர்ட் பகுதிக்கு சென்று, எங்களை தொடர்புகொள்ளவும் என்கிற பக்கத்திற்கு சென்று உங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உள்ள சாட் ஆப்ஷனை தேர்வுசெய்து, பெயர் போன்ற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் கஸ்டமர் கேர் அதிகாரியுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும், இப்போது நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் மட்டுமே கூகுள் பே வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.