கருப்பு உடையில் ஜொலிஜொலிக்கும் ஜொனிதா காந்தி!
படங்களில் நடிக்கும் கதாநாயகியை விட உடன் நடிக்கும் துணை கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகுவது வழக்கம், அந்த வகையில் பாடகி ஒருவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறார் என்றால் அது ஜொனிதா காந்தி தான்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் பாடி புகழ் பெற்றுள்ளார். தமிழில் குறிப்பிடத்தக்க சில படங்களில் இவர் பாடல்கள் ரசிக்கப்பட்டாலும், இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டது 'செல்லம்மா' பாடலில் தான், அதைவிட இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குது' பாடல் தான்.
இவரது சமூக வலைதள பக்கங்கள் ரசிகர்கள் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இவர் கருப்பு நிற உடையணிந்து பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.