பரஸ்பர நிதியம்: ஆயிரத்தை எளிதில் கோடியாக்க... உதவும் சில வகை SIP முதலீடுகள்
பரஸ்பர நிதியம்: பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது என்பதால், பணத்தை குறுகிய காலத்தில் பன்மடங்காக்க, பலர் இதில் முதலீடு செய்கின்றனர். எனினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், எத்தனை வகையான எஸ்ஐபிகள் உள்ளன, எந்தப் பிரிவில் முதலீடு செய்வது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
வழக்கமான SIP (Regular SIP) என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யும் முதலீட்டு முறையாகும். மாதம் தோறும், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என்பதன் அடிப்படையில் உங்கள் வசதிக்கேற்ப இந்தத் தொகையை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். வழக்கமான SIP அதிகம் விரும்பப்படுகிறது, ஏனெனில் அதில் முதலீடு செய்யப்படும் தொகை, தேதி மற்றும் காலம் ஆகியவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. SIP பணம் செலுத்தும் தேதியைத் தேர்வுசெய்ய உங்களுக்கு ஆப்ஷனும் உள்ளது. முதலீட்டாளர்களுக்கு தினசரி SIP மற்றும் வாராந்திர SIP விருப்பமும் உள்ளது.
ஸ்டெப்-அப் SIP முதலீட்டாளர்கள் தங்கள் SIP முதலீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிகரிக்க அனுமதிக்கிறது. உதாரணமாக, நீங்கள் விரும்பினால், உங்கள் SIP தொகையை ஆண்டு அடிப்படையில் அதிகரிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 எஸ்ஐபி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில், உங்கள் முதலீட்டின் தொகையை ஆண்டுதோறும் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் அதிகரிக்கலாம். இந்த வழியில் உங்கள் முதலீடு ஆண்டுதோறும் தானாக வளரும்.
நெகிழ்வான SIP (Flexible SIP), பெயர் குறிப்பிடுவது போல, மிகவும் வசதியானது. ஏனெனில் இதில் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப SIP தொகையை கூட்டவோ குறைக்கவோ முடியும். எடுத்துக்காட்டாக, சில அவசரநிலை காரணமாக ஒரு மாதத்தில் உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலையில், உங்களால், அந்த அளவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலையில், உங்கள் SIP இன் அளவைக் குறைக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் உங்கள் SIP தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், SIP நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் ஃபண்ட் ஹவுஸுக்குத் தெரிவிக்க வேண்டும்.
ட்ரிகர் எஸ்ஐபி: ட்ரிகர் எஸ்ஐபி, சந்தை நல்ல நிலையில் இருக்கும் நேரத்தில் முதலீடு செய்வதை நம்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த SIP உதவும். முதலீடு செய்யப்படும் பணம், நேரம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் SIP எப்போது தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். அதாவது நேரம், சந்தை மதிப்பீடு, விலை போன்ற சில நிபந்தனைகளை முன்கூட்டியே அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, விலையின் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்தால், NAV ரூ. 1000ஐத் தாண்டும்போது SIP ட்ரிகர் செய்யவும் என்ற நிபந்தனையை அமைக்கலாம். நீங்கள் நிர்ணயித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், உங்கள் பணம் முதலீடு செய்யப்படும். இந்த SIP குறிப்பாக சந்தை ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கானது. நேரம் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் ட்ரிகர் SIPகளை நீங்கள் திட்டமிடலாம்.
காப்பீட்டுடன் வரும் எஸ்ஐபி முதலீட்டில், முதலீட்டுடன் காப்பீட்டுப் பாதுகாப்பையும் பெறுவீர்கள். அதாவது டேர்ம் இன்சூரன்ஸ் கவரேஷும் கிடைக்கும். இந்த SIP இன் கீழ், பல ஃபண்ட் ஹவுஸ்கள், முதலீட்டாளருக்கு முதல் SIP தொகையை விட 10 மடங்கு வரை காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன. காப்பீட்டுத் தொகை பின்னர் அதிகரிக்கிறது. இது முதலீட்டாளருக்கு கூடுதல் பாதுகாப்பின் பலனை அளிக்கிறது. ஆனால் இந்த அம்சம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எஸ்ஐபி வகை: புரிதல் இல்லாமல் SIP (Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் அல்ல. எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 வெவ்வேறு SIPகளைப் பற்றி அறிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வகை எஸ்ஐபி முதலீட்டை தேர்ந்தெடுத்து, குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக்கலாம்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.