SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலா
SIP Investment Tips: பணத்தை ஈட்ட நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை சேமிப்பிலும் அளிப்பது மிக அவசியம். எந்தவொரு சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அதில் பெரிய கார்பஸை உருவாக்க, இள வயதிலேயே முதலீட்டைத் தொடங்குவதுதான் மிக முக்கியம்.
SIP 12x12x24 சூத்திரம்: உங்களுக்கு 25 வயதாகிய நிலையில், ஒரு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 முதலீடு செய்யத் தொடங்க, 24 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டில் குறைந்தது ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
12% முதல் 15% வரை வருமானம்: இருப்பினும், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 12% முதல் 15% வரை வருமானத்தை அளிக்கிறதுஅதிலும், சில சிறந்த பரஸ்பர நிதியங்கள் 20% வரை கூட வருமானத்தை தருகின்றன.
ரூ.2 கோடி நிதி: நீண்ட காலத்திற்கு SIP திட்டத்தில் முதலீடு செய்தால், 24 ஆண்டுகளில் உங்களுக்கு ஒரு பெரிய கார்பஸ் கிடைக்கும். 12 சதவீதத்துடன் உங்களின் மொத்தத் தொகை ரூ.2,00,72,246 ஆகிவிடும். அதாவது சுமார் ரூ.2 கோடி நிதி கிடைக்கும்.
SIP முதலீடு: முறையான முதலீட்டுத் திட்டம் அதாவது SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் நிலையான தொகையை முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. இதில், நீங்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
கூட்டு வட்டியின் பலன்: SIP மூலம், முதலீட்டில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். அதாவது, உங்கள் வருவாயை அதிகரிக்க இது உங்களுக்கு உதவுகிறது. இது அடிப்படையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து பெரும் வருமானம் சிறப்பாக இருக்கும்.
மாதாந்திர முதலீடு: SIP என்னும் நிலையான மாதாந்திர முதலீடு மூலம், முதலீட்டாளர்கள் மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக முடியும் என்பது பல தரவுகள் மூலம் தொடர்ந்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், SIP உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து விரிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.