SIP Mutual Fund: ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்க... இந்த விஷயங்களில் கவனம் தேவை

Wed, 27 Nov 2024-10:39 am,

பரஸ்பர நிதிய முதலீடு: SIP (சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) இலிருந்து பம்பர் ரிட்டர்ன்களை நீங்கள் விரும்பினால், எவ்வளவு இளம் வயதில் தொட்ங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே தொடங்க வேண்டும். 

தொடர் முதலீடு: SIP மூலம் உங்கள் நிதி இலக்குகளை அடைவதில் தொடர் முதலீடு மிக ஒரு முக்கிய காரணியாகும். மாதாந்திரம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்வது அவசியம்.

முதலீட்டு த் தேர்வு: வருமானத்தை அதிகரிக்க நலல் வருமானம் கொடுக்கும் சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே, உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ற பரஸ்பர நிதியத்தை தேர்வு செய்யவும்.

பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடு : ஆபத்தை குறைப்பதிலும், வருமானத்தை அதிகரிப்பதிலும், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதிலும் பல இடங்களில் பரவலாக பல்வகைப்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். ஒரே இடத்தில் இல்லாமல், பங்கு, கடன் மற்றும் தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்து உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துங்கள்.

SIP தொகையை அதிகரித்தல்: உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, ​​உங்கள் SIP முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்கவும். பணத்தை பன்மடங்காக்க இது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் SIP பங்களிப்புகளை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம், வருமானம் பெருமளவு அதிகரிக்கும்.

வருமானத்தை கண்காணித்தல்: உங்கள் SIP போர்ட்ஃபோலியோ சரியான அளவில் வருமானம் தருகிறதா உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். உங்கள் முதலீட்டு செயல்திறனைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப உங்கள் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.

இலக்குகளில் கவனம் தேவை: பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் முதலீட்டு நிதி இலக்குகளைக் மனதில் கொண்டு தேர்வு செய்யவும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் சரியான நிதியை எளிதாக தேர்வு செய்யலாம்.

SIP ரிட்டர்ன் கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்: SIP ரிட்டர்ன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் SIP முதலீடுகளின் சாத்தியமான வருமானத்தைக் கணக்கிட்டு, உங்களுக்கு கிடைத்துள்ள வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கவும்.

செலவு விகிதம் மற்றும் கமிஷன்: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, ​​அதில் உள்ள செலவு விகிதம் மற்றும் கமிஷன் ஆகிய இரண்டு முக்கிய காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பரஸ்பர நிதி திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு செலவு விகிதம் மாறுபடலாம். அதிக செலவு விகிதம் என்பது உங்கள் முதலீட்டு வருவாயின் பெரும்பகுதி கட்டணம் மற்றும் செலவுகளுக்காக செலவிடப்படும்.

முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link