Bathing Mistakes: குளித்த பின்பு உடனடியாக இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
குளித்தால் உடல் இலகுவாகி, பல நோய்களும் குணமாகும். இதனால் குளித்த உடனேயே முகத்திற்கு மேக்கப் போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து போடுவது நல்லது.
குளித்துவிட்டு வரும்போதெல்லாம் உடனே டவலால் முகத்தைத் தேய்க்கக் கூடாது. இப்படி செய்வதால் முகம் உயிரற்றதாகிவிடும். லேசான துணிகளை வைத்து முகத்தை துடைப்பது நல்லது.
குளித்த பின், சருமத்தில் கெமிக்கல் கிரீம்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களை தடவக்கூடாது. இவற்றைத் தடவினால் முகம் கெட்டுவிடும்.
நீங்கள் உங்கள் முகத்தை மட்டும் ஈரப்பதமாக்க நினைக்க கூடாது. உங்கள் முழு உடலையும் ஈரப்பதமாக்க வேண்டும், இதனால் உடல் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும்.
சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால் அப்படி அதிக நேரம் குளிக்கக் கூடாது. தண்ணீரில் நீண்ட நேரம் இருப்பதால் சருமம் உயிரற்றதாகிவிடும்.