பூமியின் வெள்ளை சொர்க்கம்: Jammu Kashmir குல்மார்க்கில் பனிப்பொழிவு..!!!
ஸ்ரீநகருக்கு வடக்கே 55 கி.மீ தொலைவில் உள்ள குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்கின்றனர். வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 11.5 டிகிரி செல்சியஸாக குறைந்துவிட்டதால், இந்த வாரம் காஷ்மீரில் குளிர் மிகவும் அதிகமாகியுள்ளது
(புகைப்படம்: AFP)
குல்மார்க்கில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் ஹோட்டலின் கூரையிலிருந்து பனியை அகற்றும் பணி. தெற்கு காஷ்மீர் தற்போது 'சில்லாய்-கலன்' பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. தால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் உறைந்துள்ளன.
(புகைப்படம்: AFP)
குல்மார்க்கில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த காலகட்டத்தில் பனிப்பொழிவுகள் ஆஅதிகம் ஏற்படுவதால், பனி சறுக்கு விளையாட்டிற்காகவும், பனிப்பொழிவை ரசிக்கவும் பல பயணிகள் வருகின்றனர்.
(புகைப்படம்: AFP)
குல்மார்க்கில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் ஒரு நபர் சாலையில் இருந்து பனியை அகற்றுகிறார்.
(புகைப்படம்: AFP)
காஷ்மீரின் குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டில் பனியால் செய்யப்பட்ட மேஜைகளில் சூடான உணவு மற்றும் பானங்களை பரிமாறும் ஒரு இக்லூ கஃபே. சுமார் 26 அடி அகலம் மற்றும் 15 அடி உயரமுள்ள இக்லூ கேஃபே, 16 விருந்தினர்கள் சாப்பிடும் அளவு போதுமான இடவசதியுடன் உள்ளது.
(புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
ஒரு விருந்தினர் ஹோட்டலில் புகைப்படம் எடுக்கிறார்
(புகைப்படம்: AFP)
குல்மார்க்கில் ஒரு நபர் ஒரு குழந்தையை ஒரு ஸ்லெட்ஜ் மீது உட்கார வைத்து இழுக்கிறார்.
(புகைப்படம்: AFP)
குல்மார்க்கில் ஸ்லெட்ஜ்களில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளை உட்கார வைத்து அங்கிருப்பவர்கள் இழுக்கிறார்கள். (புகைப்படம்: AFP)