மூளை முதல் இதயம் வரை... உலர் பழங்களின் சத்துக்கள் இரட்டிப்பாக... ஊற வைத்து சாப்பிடுங்க

Sun, 01 Dec 2024-8:36 am,

உடலை ஆரோக்கியமக வைத்திருப்பதில், டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், மூளை முதல் எலும்புகள், இதயம், நரம்புகள் என அனைத்தையும் பிட்டாக வைத்து, சிறப்பாக செயல்பட உலர் பழங்கள் மிகவும் உதவும். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான உலர் பழங்களின் அதிக பட்ச பனை பெறவும். அதன் ஊட்டச்சத்து மதிப்பை இரட்டிப்பாக்கவும் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், ஆரோக்கிய கொழுப்புகள் ஆகியவை நிறைந்த அற்புத உணவான உலர் பழங்களை சரியான முறையில் உட்கொள்வது மிகவும் முக்கியம். உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டசத்து மதிப்பு இரட்டிப்பாவதோடு, எளிதில் செரிமானம் ஆகும்.

ஊறவைத்த திராட்சை: திராட்சையை 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு சாப்பிட உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஊறவைத்த திராட்சை உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது தவிர, திராட்சையில் உள்ள இரும்பு சத்து இரட்டிப்பாகி, உடலில் இரத்த சோகை வராமல் தடுக்கும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு: பாதாம் பருப்பை 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பாதாமில் இதர ஊட்டசத்துக்களுடன் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினமும் 2 முதல் 4 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பலப்படுத்தலாம்.

ஊறவைத்த வாதுமை பருப்பு: மூளைக்கு நன்மை பயக்கும் வாதுமை பருப்பில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததுள்ளது. இந்த உலர் பழம், உங்கள் எடை இழப்பு முயற்சியை எளிதாக்குவதுடன், உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

ஊற வைத்த முந்திரி பருப்பு: முந்திரி பருப்பில் நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, புரதம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், வைட்டமின் கே, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

ஊற வைத்த பேரிச்சம்பழம்: பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பாலிலும் பல சத்துக்கள் உள்ளது. இவற்றை ஊற வைப்பதால், அதன் ஊட்டச்சத்து அதிகரிப்பதோடு, எளிதில் ஜீரணமாகும். பேரிச்சம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலை வலுவாக்கி, உடலுக்கு ஆற்றலை அள்ளித் தருகிறது.

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link