இந்த விஷயத்தை மட்டும் சோஷியல் மீடியாவில பகிர வேண்டாம்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
தொழில்நுட்பம் என்பது நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை தினசரி கொண்டு வந்துக் கொண்டே இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்தாமல் போனால் நாம் பின்தங்கிவிடுவோம். உலகத்திற்கு ஏற்றவாறு சமூக செயல்பாடுகளில் நாம் ஈடுபடுவது அவசியம். ஆனால், மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி அதிலேயே முழுகிப் போவது பல்வேறு ஆபத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும்
மனிதர்கள் என்பவர்கள் சமூக விலங்கு என்று சொல்லி கேள்விபட்டிருக்கலாம். உண்மையில் சமூகம் என்று ஒன்று இல்லாவிட்டால், நம்முடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? இந்த கேள்வின் ஆழம் அனைவருக்கும் புரியாது
சமூக வாழ்க்கை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று சொல்லலாம். ஆனால், சமூக ஊடகங்களில் கணக்கு இல்லையென்றால் வாழ்க்கை நொந்து நூலாகிவிடுமா? இந்தக் கேள்விக்கு பதில் என்ன?
குற்றம், பாதிப்பு, திருட்டு என பல்வேறு வகையான குற்றங்கள் நேரடியாக நடந்துக் கொண்டிருந்த காலம் போய், இன்று சமூக ஊடகங்களில் நமது நடவடிக்கைகள் மூலம் நாம் குறிவைக்கப்படுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சமூக ஊடகங்கள் தகவல்களை தெரிந்துக் கொள்ளவும், புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ளவும் என்ற நிலை மாறி, மக்களை இலக்கு வைக்கும் இடமாக மாறி வருவது கவலையளிக்கிறது
இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சமூக ஊடக மோகத்தில் மூழ்கிப் போய் இருக்கின்றனர். அதை பார்த்து ரசிப்பதுடன் இருந்தாலாவது பரவாயில்லை. தன்னை பின் தொடர்பவர்களிடம் தங்களுடைய அனைத்து விஷயங்களையும் பகிர்வது ஆபத்தானது
உதாரணமாக, நான்கு நாட்களுக்கு நான் பிஸி, வெளியூருக்கு போகிறேன் என்று செய்தி போட்டால், அது மறைந்திருக்கும் குற்றவாளிக்கான துப்பு செய்தியாக மாறி உங்கள் வீட்டை நோட்டம் போட்டு, திருட வழி வகுக்கும்
நமது பாதுகாப்பு நம் கையில் என்பதை உணர்ந்து, எந்த விஷயத்தை எங்கே பகிரவேண்டும் என்பதை தெரிந்து சமூக ஊடகங்களை பயனபடுத்துவது நல்லது