குழப்பம், மன சோர்வை உண்டாக்கும் சோடியம் குறைபாடு; அலட்சியம் வேண்டாம்!
நம் வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் வெள்ளை உப்பை சாதாரண உப்பு என்றும் சொல்வார்கள். இதில் சோடியம் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் உப்பில் 38,758 மி.கி சோடியம் உள்ளது. இருப்பினும், அதை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பன்னீர்: 100 கிராம் பாலாடைக்கட்டியில் சுமார் 300 மில்லிகிராம் சோடியம் இருந்தாலும், பாலாடைக்கட்டி கால்சியத்தின் வளமான மூலமாகும். இது தினசரி தேவையில் 12% ஆகும். இந்த பன்னீரில் உள்ள உப்பு உணவின் சுவையையும் மேம்படுத்துகிறது. எனினும் பாலாடைக்கட்டியை அளவோடு உட்கொள்வது நல்லது.
கடல் உணவு இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனை முழுமையாக சமைக்கும்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் கடல் உணவை கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனெனில் பதப்படுத்ப்பட்ட டுனா போன்ற மீன் உணவுகளில் அதிக உப்பு உள்ளது. பதப்படுத்தப்பட்ட டுனா மற்றும் இறால்களில், ஒருவர் சாப்பிடும் அளவில் சுமார் 400 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பிரெஷ்ஷான டுனா, சால்மன் ஆகியவை சிறந்த கடல் உணவுகளில் ஒன்றாகும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியம் அதிகமாக உள்ளது, 100 கிராம் கோழி மற்றும் வான்கோழியில் 50 மி.கி சோடியம் உள்ளது. ஆனால் சிவப்பு இறைச்சியில் அதிகம் உள்ளது. உங்கள் உடலுக்குத் தேவையான அளவு சோடியத்தை மட்டும் உட்கொள்ளுங்கள்.
நீங்கள் இயற்கையாகவே உடலில் சோடியம் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால், காய்கறி சாறு மிகவும் சிறந்தது. பிரெஷ்ஷான காய்கறி சாறுகளை மட்டும் அருந்தவும், சந்தையில் கிடைக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.