சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்
இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் கருடன்.
இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே இந்த படம் இப்போது மே மாதத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருடன் திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.