கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை பிடித்த ஸ்ரீசாந்தின் அபரிமித சாதனைகள்
இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் தனது தனித்துவமான பாணியிலும், அசாதாரண பந்துவீச்சு திறமையிலும் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
இளம் வயதில் சர்வதே கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் இவர். 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் 5 விக்கெட்டுகள் எடுக்கும்போது ஸ்ரீசாந்தின் வயது 19 வயது மற்றும் 102 நாட்கள்.
இளம் வயதில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார்.
ரஞ்சி கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த கேரளாவின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற அணிகளில் இவர் இடம் பெற்றிருந்தார். இந்த இரு உலக கோப்பைகளிலும் குறிப்பிடும்படியாக தனது பங்களிப்பை செய்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க சீசனில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர். முதல் இடத்தில் சோகைல் தன்வீர் 22 விக்கெட்டுகளுடன் இருந்தார்.
18 விக்கெட்டுகளை எடுத்த ஸ்ரீசாந்த் 2வது இடத்தை பிடித்தார். இந்திய பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் பார்க்கும்போது அந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் இவரே.