ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துள்ளது மாநில அரசு. அகவிலைப்படியை (DA) 3% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2016 விதியின் கீழ் DAவை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் சம்பளம் உயரும்.
ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கான பணம், 2025 ஜனவரியில் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர் கூடுதல் ஊதியம் பெற இது உதவும்.
பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த புதிய சம்பளம் சென்று சேரும். இது ஆணையத்திடம் இருந்து ஊதிய உயர்வு பெற ஒப்புதல் பெற்றவர்களுக்கானது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் மாற்றம் கொண்டு வர அரசு பரிசீலித்து வந்தது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.