’வான்கடேவில் என்னோட சிலை வச்சதுக்கு நன்றி’ ஸ்டீவ் ஸ்மித் கிண்டல்
மும்பை வான்கடே மைதானத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் விதமாக இந்த சிலை வான்கடேவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை இந்தியா - இலங்கை உலக கோப்பை மேட்சுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டது.
வழக்கம்போல் இந்த சிலையும் கேலியும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. பலர் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிலை போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிண்டல் செய்யும் அளவுக்கு மோசமான சிலை வடிவமைக்கப்படவில்லை என்றாலும், சச்சினின் சிலை உருவம் ஒரு சாயலில் ஸ்டீவ் ஸ்மித் போலவே இருக்கிறது.
இதனை குறிப்பிட்டு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், எனக்கு வான்கடேவில் சிலை வைத்தற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.