Share Market: தாறுமாறாக வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை! இறுதியில் என்ன ஆச்சு? திகிலூட்டும் ஷேர் மார்க்கெட்!
மார்ச் 19ஆம் தேதி காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியபோதே, சென்செக்ஸ் இன்று சிவப்பு நிறத்தில் தொடங்கியது. 72,431.98 என்பதில் இருந்து 316.44 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 22,000 என்ற நிலைக்கு கீழே சென்றது
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப்100 ஆகியவை முறையே 1.24 சதவீதம் மற்றும் 1.19 சதவீதம் சரிந்தன.
பிஎஸ்இ சென்செக்ஸ் 736.37 புள்ளிகள் சரிந்து 72,012.05 புள்ளிகளில் நிலைத்தது. என்எஸ்இ நிஃப்டி 238.25 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் சரிந்து 21,817.45 இல் முடிந்தது.
நிஃப்டி ஐடி பங்குகள், எஃப்எம்சிஜி, பார்மா மற்றும் மீடியா பங்குகள் தலா 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. நிஃப்டி மிட்கேப்100 மற்றும் ஸ்மால்கேப்100 ஆகியவை முறையே 1.24 சதவீதம் மற்றும் 1.19 சதவீதம் சரிந்தன.
இன்று பங்குச்சந்தையில், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. IndusInd Bank, Wipro, Nestle India, HCL Tech, Infosys, Power Grid மற்றும் ITCS பங்குகளின் விலையும் குறைந்தன
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை