Bone Health: குளிர்காலத்தில் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க இனிப்பான வழிகள்

Mon, 08 Jan 2024-9:41 am,

நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தி போதுமான அளவு இருந்தால், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 

நமது உணவில் எலும்பு ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருந்தால், அது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். புரதச்சத்து, அமினோ அமிலங்களை வழங்குகிறது, இது கொலாஜனை உருவாக்குவதற்கான மூலப்பொருள், இது எலும்பின் 50% என்ற அளவில் இருக்கிறது.. புரதம் நிறைந்த உணவு எலும்பு உருவாக்கம் மற்றும் வலிமையை அதிகரிக்கும்,  அதிக புரத உணவுடன் கால்சியத்தை நல்ல அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியம். அந்த வகையில், குளிர்காலத்தில் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் சில தின்பண்டங்களைப் பார்ப்போம்

குளிர்காலத்தில் எள் அதிகமாக பயன்படுத்துவது நல்லது. உடல் சூடாக இருக்க பலருக்கு எள்ளால் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். எள்ளுருண்டையை சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். அதுமட்டுமின்றி, பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தவும் முடியும். எள்ளுருண்டை பெரும்பான்மையாக இனிப்பு சேர்த்துச் செய்யப்படுகிறது. காரம் சேர்த்துச் செய்யப்படும் எள்ளுருண்டையும் சுவையானது, சத்தானது

ஆளிவிதை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஆளிவிதையை அவ்வப்போது உண்டு வந்தால் பலவீனமான எலும்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இது உதவும். அதிலும் குளிர்காலத்தில் ஆளிவிதை லட்டுகளை சாப்பிடுவது நல்லது

கடலை மிட்டாய் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உன்னும் தின்பண்டமாகும்.  கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய தின்பண்டம் மிகவும் சத்தானது. எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். உண்ண மட்டுமல்ல, பார்க்கவும் கண்ணைக் கவரும் கடலை மிட்டாயை தினசரி சாப்பிடலாம்

வலுவான எலும்புக்கு உலர் பழங்களை உண்பது நல்லது. பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட லட்டுகளை உட்கொள்வது பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தும். மேலும், இது மனதையும் அமைதியாக வைத்திருக்கும் என்பதால், குளிர்காலத்திற்கு ஏற்ற இனிப்பு லட்டு இது  

இந்த லட்டுகள் அனைத்துமே எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அதிலும் குறிப்பாக, கொலஸ்ட்ரால், நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.

 (பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link