புதனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு அபூர்வ ராஜயோகம்

Sat, 12 Nov 2022-5:31 pm,

நவம்பர் 13-ம் தேதி புதன் துலாம் ராசியிலிருந்து விலகி விருச்சிக ராசியில் பிரவேசிக்கப் போகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரமும் சாதகமாகவே இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் உடனடி முன்னேற்றம் அடைவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். வணிகம் தொடர்பாக பயணங்கள் செல்லக்கூடும். இது எதிர்காலத்தில் நல்ல பலனளிக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

 

வேத ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியில் புதன் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மை பயக்கும். உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. ஆகையால் இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மறுபுறம், நீங்கள் உங்கள் வணிகத்தை அதிகரிக்க நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. இந்த நேரத்தில், வசதிகள் அதிகரிக்கலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில அனுகூலமான செய்திகள் கிடைக்கும். அதேநேரம் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இம்முறை சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

கன்னி ராசியில் புதன் நுழைவது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த ராசியின் மூன்றாம் வீட்டில் இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது. ஜோதிடத்தில், இது சகோதரத்துவம் மற்றும் வலிமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த மாற்றத்தின்போது வலிமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு ஏற்ற காலம் என்பதால் நல்ல வாய்ப்புகள் உருவாகும். நீதிமன்ற வழக்குகளுக்கும் இந்த நேரம் நல்லது. பணியிடத்தில் இலக்கை அடைவதில் வெற்றி உண்டாகும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மீன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சிறப்பாக அமையும். இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிடலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link