Diabetic Diet: குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய கீரை வகைகள்
எந்த வகையான நோயால் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்படாவிட்டாலும், நீங்கள் எப்போதும் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். சில நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசினால், அவர்களுக்கு உணவு மிகவும் முக்கியமான பிரச்சினையாக மாறும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குளிர்காலத்தில், நமது இரத்த சர்க்கரை அளவு தானாகவே அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே, இந்த சீசனில் சர்க்கரை நோயாளிகள் உணவில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அப்படிப்பட்ட 5 கீரைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இவற்றை உட்கொள்வதன் மூலம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
குளிர்காலத்தில் வட இந்தியாவில், கடுகு கீரை மற்றும் சோள ரொட்டியை பலர் விரும்புகிறார்கள். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடுகு கீரை, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டுமெனில், வாரம் இருமுறை கடுகு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இரும்பின் சிறந்த ஆதாரமான கீரை, நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது தவிர, வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற தனிமங்களும் கீரையில் அதிகளவில் உள்ளன. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் கீரை சூப் மற்றும் பரோட்டாவையும் சாப்பிடலாம்.
சிவப்பு, பச்சை என வெவ்வேறு நிறத்தில் இருக்கும் செலரி மற்றும் பருப்புக்கீரைகள் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது, நமது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
பீட்ரூட் கீரையில் புரதம் மற்றும் தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்துள்ளது. பீட்ருட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிமை கொடுக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் வெந்தயம் மட்டுமல்ல, வெந்தயக்கீரையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தக் கீரையில், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் ஏராளமாக காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் வெந்தயக்கீரையை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை