Sugarcane: கரும்பு வாங்கலையோ கரும்பு... பொங்கல் வந்தாச்சு....
கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்றும் பொருள் கொள்ளலாம்.
வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வணிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடைய கரும்பு, 6 முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது.
இந்தியாவில் கி.மு. 500 ஆம் ஆண்டு முதல் கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
கரும்பில் இருந்து சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, ஈஸ்ட் போன்ற பொருட்கள் மட்டுமா தயாரிக்கப்படுகின்றன? சர்க்கரையை பிரித்தெடுத்த பிறகு இருக்கும் சக்கைக் கழிவுகள் எரிசாராயம், எத்த்னால் போன்ற உபபொருட்களை தயாரிக்கப் பயன்படுகின்றன.
கரும்புச்சாறு பிழியப்பட்டபின் எஞ்சிய கழிவுகளிலிருந்து புண்ணாக்கு தயார் செய்யப்படுகிறது.
இந்தப் புண்ணாக்குகளில் 5-15% புரதம், 5-15% கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், சர்க்கரை 10-30%, நார்ப்பொருள் 10-20%, சாம்பல்சத்தும், பிறநுண்ணூட்டச் சத்துக்களும் உள்ளன . இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பயிர்களுக்குஇயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. புண்ணாக்கில் இருந்து கால்நடைத் தீவனம், கரும்பு மெழுகு தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, மீத்தேன் போன்ற எரிபொருள் தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகின்றன.
கரும்பு அறுவடை செய்த பிறகு வயலில் எஞ்சிய சோகைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றன.