சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் உங்கள் பெண்ணுக்கு ரூ 65 லட்சம் கிடைக்கும் தெரியுமா?

Sat, 08 Apr 2023-7:14 pm,

சிறந்த திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), உங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில் தொடங்கலாம். கணக்கைத் திறக்க ஒரு சில ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் ஒரு எளிய செயலாகும். குறைந்தபட்ச வைப்புத் தொகையான 250 ரூபாயில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள் கணக்கு தொடங்கும் படிவம், பயனாளியின் பிறப்புச் சான்றிதழ் (மருத்துவமனை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு அல்லது குழந்தையின் பள்ளி முதல்வரிடமிருந்து பெறலாம்), பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கான சரியான முகவரிச் சான்று மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கான அடையாளச் சான்று இருந்தால் போதும்

சுகன்யா சம்ரித்தி யோஜனா முதிர்வு காலம் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு தொடங்கும் நாளில் இருந்து 21 வருட முதிர்வு காலத்தை கொண்டுள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி கால்குலேட்டர் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா ரிட்டர்ன் கால்குலேட்டர் SSY கால்குலேட்டர் 7.6 சதவீத சராசரி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்கு ரூ. 1.5 லட்சம் வருடாந்திர வைப்புத்தொகையுடன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.65,93,071 முதிர்வு மதிப்பை எட்டும் என்று மதிப்பிடுகிறது.

15 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகை ரூ.43,43,071 ஆகவும், முதலீடுகளுக்கான வட்டி ரூ.22,50,000 ஆகவும் இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link