சூரியனும் சுக்கிரனும் சேர்வதால் உருவாகும் அதிசய ராஜயோகம் - இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்..!

Thu, 30 Jan 2025-3:03 pm,

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சேர்ந்து மங்களகரமான ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இதனால் பல அதிர்ஷ்டங்கள் ஒவ்வொருவரின் வாழ்கையிலும் நிகழும். அந்தவகையில் மார்ச் மாதத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியன், மீன ராசியில் சஞ்சரிப்பார். சுக்கிர பகவான் ஏற்கனவே அந்த ராசியில் இருக்கிறார்.

இந்த இரண்டு கிரகங்களும் சேருவதால் சுக்ராதித்ய ராஜயோகம் (Sukraditya Raja Yogam) உருவாகப் போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்க உள்ளது. மூன்று ராசிகளுக்கு செல்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். அவை எந்த ராசிகள் என தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம் | மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜ யோகம் சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் கர்ம பாவ ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில், உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பு முன்னேற்றம் கிடைக்கக்கூடும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். 

பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும், இது நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், வணிகர்கள் நல்ல நிதி லாபத்தைப் பெறலாம். மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம் | சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகும்போது, விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கக்கூடும். ஏனென்றால் இந்த ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் இடத்தில் உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிட முடியும். அதே நேரத்தில், காதல் உறவில் இருப்பவர்கள் வெற்றி பெறலாம். 

இளம் வயதில் இருப்பவர்களுக்கு உங்கள் திருமணம் ஒரு காதல் திருமணமாக கூட இருக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் பெரியவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம் | சுக்ராதித்ய ராஜயோகம் உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் செல்வம் மற்றும் பேச்சு ஸ்தானத்தில் உருவாகப் போகிறது. எனவே, இந்த காலகட்டத்தில், நீங்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். மேலும், இந்த நேரத்தில், புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

 

இதனால் நிதி சிக்கல் இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் சக்தியும் உற்சாகமும் அதிகரிக்கும். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது நிம்மதி அடைவார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link