ஆடி மாதத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! லக்ஷ்மி நாராயண யோகம் ஜாக்பாட்!
பெயர் புகழ் மற்றும் பிரபலத்துக்கு காரணமான சுக்கிர பகவான் இந்த ஜூலை மாதத்தில் இரு முறை பெயர்ச்சியாகிறார். தற்போது கடகத்தில் இருக்கும் சுக்கிரன் இன்னும் இரு தினங்களில் சஞ்சாரத்தை மாற்றுகிறார்
ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். கடந்த 7 ஆம் தேதி கடக ராசிக்கு மாறிய சுக்கிரன், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு 31 ஜூலை 2024 அன்று மீண்டும் பெயர்ச்சியாகிறார்
சுக்கிரனின் இரண்டாவது பெயர்ச்சியால் லக்ஷ்மி நாராயண யோகம் ஏற்படுகிறது. இது சில ராசிகளுக்கு அருமையானதாக இருக்கும்
பணவரவை அதிகரிக்கும் சுக்கிரன், தொழில், வியாபாரத்தையும் சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்! இதெல்லாம் யாருக்கு வாய்க்கும்? தெரிந்துக் கொள்வோம்.
எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடையப்போகும் ராசிகளில் ரிஷப ராசிக்காரர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். எதிர்பாராத வெற்றி, முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்பு என மகிழ்ச்சி கூடும் காலம் இது
சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் துலா ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குதூகலம் கொப்பளிக்கும், ஆசைப்பட்ட விஷயங்களை சுக்கிரன் நிறைவேற்றித் தருவார்
சுக்கிர பகவானின் அருளாசி, சிம்ம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், ஆடி மாதத்தில் சிம்மத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் அழியாத செல்வத்தைத் தந்து மனதில் மகிழ்ச்சியை அதிகரிப்பார்
மேஷத்திற்கு, ஜூலை 31 சுக்கிரப் பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இதுவரை இல்லாத பல மாற்றங்கள் நடைபெறும். பிறருக்கு பணம் கொடுத்து வராதோ என்ற கவலையுடன் இருந்தவர்கள், இனிமேல் அந்தக் கவலைகள் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்