காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஒன்று. இதுவரை ஒரு முறை கோப்பை வென்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக காவ்யா மாறன் உள்ளார். போட்டி நடைபெறும் போது காவ்யா மாறன் மைதானத்திற்கு வருவது வழக்கம்.
ஐபிஎல் ஏலத்தின் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் தான் காவ்யா மாறன் பொதுவெளியில் வெளியே வருவார். இவரது ரியாக்சன்கள் பலரது பேவரட்.
ரஜினியும் கூட ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவின் போது காவ்யா பற்றி பேசி இருப்பார். அடுத்த முறை நல்ல வீரர்களை அணியில் எடுங்கள் என்று கூறி இருந்தார்.
காவ்யா மாறனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 510 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக சொத்து உள்ள பெண்மணிகளில் இவரும் ஒருவர்.