சூரியனின் அருளால்... சித்திரை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
வசந்த நவராத்திரிக்கு இடையில், ஏப்ரல் 13ம் தேதி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். மேஷ ராசியில் சூரியனின் வருகையால் சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய யோகம் உருவாக்கும். இது தவிர, மேஷத்தில் ஏற்கனவே இருக்கும் குரு உடன் சூரியன் இணைகிறார். இதனால், மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் தங்கள், வேலையிலும் தொழிலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் சித்திரை மாதத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உடலிலும் மனதிலும் புதிய ஆற்றல் பாயும். வேலையில், தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். பண முதலீடுகளை அதிகரிக்கலாம். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு சாத்தியமாகும். எனினும், சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தன வரவினால் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.
மிதுன ராசியினருக்கு, சூரிய பெயர்ச்சியினால், சித்திர மாதத்தில் பொருள் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவு வலுவடையும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உல்லாசமாக சுற்றுலா செல்லலாம். நிதி ரீதியாக முன்பை விட வலுவாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானது. வாழ்க்கையில் வெற்றிக்கான காலம் தொடங்கும்.
கடக ராசி: சூரியனின் இந்த சஞ்சாரத்தினல், சித்திரை மாதத்தில் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வேலையில், தொழில் வளர்ச்சியை காணலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் உங்கள் தகுதியை நிரூபிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மூத்தவர்களுடன் உங்களது ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்புகள் வரும். தொழில்முறை வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சித்திர மாதத்தில் மேஷ ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் அற்புதமான பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. நல்ல வேலை கிடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சம்பளம் அதிகரிக்கும் . உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் பணத்தை நல்ல வகையில் சேமிக்க முடியும். பழைய முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பல சுப காரியங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால், சித்திரை மாதத்தில், வேலையில் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். உங்களின், வேலையில் தொழில் முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சிலருக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்களும் பல நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் புதிய வேலை பெறும் முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.