ஐப்பசி 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு வரவு...? எந்த ராசிகளுக்கு செலவு...?

Sun, 27 Oct 2024-5:40 am,

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது

 

மேஷம்: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்  அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : புதுமையான நாள். கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும். 

 

ரிஷபம்: உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை வளர்ப்பு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு  அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்  கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும். ரோகிணி : மாற்றம் பிறக்கும். மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

 

மிதுனம்: மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாகப் பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்  மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள். திருவாதிரை : இழுபறிகள் மறையும். புனர்பூசம் : விவேகம் வேண்டும். 

 

கடகம்: மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் வழியில் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் :  வெண்மஞ்சள் நிறம்  புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும். பூசம் : அனுபவம் ஏற்படும்.  ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.

 

சிம்மம்: உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.  வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : அனுசரித்துச் செல்லவும்.  பூரம் :  நம்பிக்கை மேம்படும்.  உத்திரம் : சூழ்நிலையறிந்து செயல்படவும். 

 

கன்னி: குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரச் செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு நிறம் உத்திரம் : செலவுகள் உண்டாகும்.   அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.  சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.

 

துலாம்: உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும். சுவாதி : மேன்மை உண்டாகும். விசாகம் : எண்ணங்கள் ஈடேறும். 

 

விருச்சிகம்: மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்  விசாகம் : அனுபவம் ஏற்படும். அனுஷம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும். கேட்டை : வாய்ப்புகள் கைகூடும். 

 

தனுசு: உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு  அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.   பூராடம் : மாற்றமான நாள். உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். 

 

மகரம்: எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். திருவோணம் : சோர்வான நாள். அவிட்டம் : நிதானம் வேண்டும்.

 

கும்பம்: வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இருந்துவந்த கருத்துகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் அவிட்டம் : புரிதல்கள் மேம்படும். சதயம் : அறிமுகம் கிடைக்கும். பூரட்டாதி : ஆதரவான நாள்.

 

மீனம்: உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் பூரட்டாதி :  ஆதரவுகள் கிடைக்கும். உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். ரேவதி : முடிவுகள் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link