கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த விதைகளில் இருக்கு அதற்கான வழி
விதைகளை ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளும்போது, அவை கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். கொலஸ்டாரலை குறைக்க உதவும் சில விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆளிவிதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக அறியப்படுகிறது. இந்த விதைகள் கொண்டு கொலஸ்ட்ராலை முழு பலத்துடன் தாக்க விரும்பினால், அவற்றை அரைத்து பயன்படுத்தவும்.
சியா விதைகள் ஆளி விதைகளைப் போலவே இருக்கும். அவை நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதில் புரதம், ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள், தியாமின் (வைட்டமின் பி1), மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை நிறைந்துள்ளன.
இந்தியாவைத் தவிர ஆசியாவின் பல நாடுகளில் எள் பயன்படுத்தப்படுகிறது. மற்ற விதைகளைப் போலவே, நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள், தாமிரம், மாங்கனீசு, மெக்னீசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.
பூசணிக்காயை சமைக்கும் போது, நாம் அடிக்கடி அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் இதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு அமிலம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ள பூசணி விதைகள் கொழுப்பைக் குறைக்க உதவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.