73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Tue, 12 Dec 2023-9:19 am,

ரஜினிகாந்த் பிறந்தநாள்: பெங்களூரில் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்த ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அடுத்த ஆண்டும் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு என்டர்டெயின் செய்யும் விதமாக படங்களை கொடுத்து வருகிறார். 

 

ரஜினிகாந்த் 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தில் திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். தற்போது 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ரஜினிகாந்த் சொத்து மதிப்பு: நடிகர் ரஜினிகாந்துக்கு போயஸ் கார்டனில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பங்களா ஒன்று உள்ளது. இவரிடம் 4 ஃபாரீன் கார்கள் உள்ளது, அவற்றின் விலை 20 கோடிக்கு மேல் இருக்கும். ஒட்டுமொத்தமாக நடிகர் ரஜினிகாந்திடம் 480 முதல் 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் சம்பளம்: ஜெயிலர் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றும் தலைவர் 170 படத்துக்கு 140 கோடி சம்பளம் என்றும் தலைவர் 171 படத்துக்கு 200 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link