ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? அதுவும் இந்த பிரமாண்ட படத்திலா?
)
சூர்யா சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார், மேலும் அவர் தயாரித்த 'ஜெய் பீம்'-லும் அவரது பாத்திரத்திற்காக பாராட்டப்பட்டார்.
)
ஐந்து பாகங்களாக வெளிவந்த ’வேள்பாரி’ நாவலை அடிப்படையாக வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் தற்போது பரபரப்பான செய்தி.
)
இருப்பினும் யாஷ் மற்றும் ரன்வீர் சிங் போன்ற மற்ற நட்சத்திரங்களை ஷங்கர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தளபதி விஜய்யின் பெயர் கூட சில முறை குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், வேள்பாரி நாவலைப் போலவே இந்தப் படமும் ஐந்து பாகங்களாக வெளிவரவுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார், கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஷங்கர் உள்ளார். இதற்கு பின் ஷங்கர் மற்றும் சூர்யா இணைவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.