ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சூரிய சஞ்சாரம் இந்த 6 ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்! சதய சூரியன் சுபபலன்கள்!
அக்டோபர் மாத சூரியப் பெயர்ச்சி, ஐப்பசி மாதத்தை தொடங்கி வைத்தது. அதன் பிறகு,சூரியன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். அக்டோபர் 24 ஆம் தேதி ஸ்வாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரத்தைத் தொடங்கினார்.
நிழல் கிரகமான ராகுவின் சதய நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. சூரியனும் ராகுவும் சேர்ந்து இவர்களுக்கு தொழிலில் பெரும் உயரத்தை அடையச் செய்வார்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சம்பள உயர்வு மற்றும் உயர் பதவி கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் மந்த நிலை நீங்கும்.
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது, கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றியைத் தரும். குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைவார்கள். பதவி உயர்வு அல்லது பெரிய பொறுப்பு உங்களை வந்தடையும், அதேபோல, எதிர்பாராத நேரத்தில் திடீரென பணம் கிடைக்கும். பிரச்சனைகள் குறையும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர சஞ்சார மாற்றத்தால் எதிர்பாராத பணப் பலன்கள் வந்து சேரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். வங்கி இருப்பு அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும்
சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
ராகுவின் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நற்பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய பதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கும் நல்ல நேரம் இது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது