உத்திராட நட்சத்திரத்தில் சூரிய பகவான்... இந்த 3 ராசிகளுக்கு `ஜாக்பாட்` பொங்கல்
சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் வீற்றிருக்கிறார். தற்போது, ஜனவரி 11ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி ஆகிறார்.
சூரிய நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக, சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி பல ராசியினருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
குறிப்பாக வேலை மற்றும் தொழில் சார்ந்த வாழ்வில் பலருக்கும் புதுப்புது வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார பலனும் கிடைக்கும்.
ஜன. 11ஆம் தேதி சூரிய பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதால் இந்த மூன்று ராசிகளுக்கு சிறப்பான நன்மைகள் உண்டாகும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
மேஷம்: சூரிய பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் மாறுவதால் ரிஷப ராசிக்காரர்களில் குறிப்பாக வேலை இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் ஈடுபடுவதற்கு லாபம் இரட்டிப்பாகும். நீண்ட நாளாக முடியாமல் இருக்கும் வேலைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும். பூர்வீக சொத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருக்கும் பெரிய பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் நீங்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்: சூரிய பகவான் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு சிறப்பான நன்மைகள் விளையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களே நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும். தொழிலில் இருப்பவர்களுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை இந்த காலகட்டத்தில் நன்றாக இருக்கும். மன அமைதியோடும் இருப்பீர்கள். உடல் நலமும் சீராக இருக்கும். வேலை இடத்தில் உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.
கும்பம்: சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் தான் இருக்கிறார். இதனால் சூரியன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவது அவர்களுக்கு நன்மையையே விளைவிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கலாம். உங்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இந்த காலகட்டத்தில் உங்கள் கைகளுக்கு கிட்டும். புதிய வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உங்களின் நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனைவியிடம் இருந்து கணவர்கள் ஒரு பெரிய பரிசை எதிர்பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.