T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம் in pics
சிட்னியில் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன். இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் தங்கமான இளைஞர்.
சிட்னி மைதானத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சிட்னி நகரில் நடராஜ உலா..
சிட்னியில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை பெருமைப்படுத்தினார்.
சிட்னியில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றி பெற்றது. தொடரின் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார்.
சிட்னியில் சோனி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.
"ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
"எனது யார்க்கர் மீது நம்பிக்கை இருக்கிறது. எப்படி பெளலிங் செய்ய வேண்டும் என்பதை விக்கெட்டுக்கு ஏற்றாற்போல முடிவு செய்வோம். அதற்கு கேப்டன் ஆலோசனை சொல்வார். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்" என்று சிட்னி அனுபவத்தைப் பற்றி கூறுகிறார் நடராஜன்.