T20 world cup 2022: உலகக்கோப்பை டி20 போட்டிகளின் டாப் 5 பேட்டர்கள்
ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா இந்த உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர். இந்தப் போட்டியில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய சிக்கந்தர் 11 சிக்சர்களை அடித்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் ஆவார். ஹேல்ஸ் 6 போட்டிகளில் விளையாடி மொத்தம் 10 சிக்சர்களை அடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன்களில் இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். மெண்டிஸ் 8 போட்டிகளில் 10 சிக்சர்களை அடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் இந்த உலக கோப்பையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஸ்டோய்னிஸ் 4 போட்டிகளில் 9 சிக்ஸர்கள் அடித்தார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆவார். சூர்யகுமார் 6 போட்டிகளில் 9 சிக்ஸர்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்