FameGame; 5 துரதிர்ஷ்டவசமான இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Sat, 11 Jun 2022-10:59 am,

பெங்கால் கிரிக்கெட் வீரர் முதல் தர கிரிக்கெட்டில் 9,000 ரன்களுக்கு மேல் குவித்த உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான். KKR அவர்களின் பட்டத்தை வென்றதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.மொத்தத்தில், அவர் 12 ODIகள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடினார், மேற்கு வங்கத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக பணியாற்றும் போது 2022 ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடினார். இவருக்கு வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக முடிந்துப் போய்விடவில்லை.

(பட ஆதாரம்: ட்விட்டர்)

அமித் மிஸ்ராவுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. முன்னதாக அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இணைந்ததே அவரை அணியில் இருந்து வெளியேற்றினார்கள் பின்னர் யுஸ்வேந்திர சாஹல்  போன்ற வீரர்களுக்கு கிடைத்த இடம் அமித் மிஸ்ராவுக்கு கிடைக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான அவரது கடைசி தொடரில், அவர் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடவில்லை.

(பட ஆதாரம்: ட்விட்டர்)

இந்திய அணியில் இடம் பெற ஜலஜ் சக்சேனா தொடர்ந்து போராடி வருகிறார். இருப்பினும், நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆல்-ரவுண்டர் ரன்களை குவித்ததுடன் ஏராளமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார்,

ஆனால் வித்தியாசமாக தேர்வாளர்களின் ரேடாரில் இருந்து வெளியேறினார். 126 முதல் தர ஆட்டங்களில், மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவுக்காக 360 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜலஜ் சக்சேனா, 6368 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை.   (பட ஆதாரம்: ட்விட்டர்)

171 முதல் தர போட்டிகளில் 11,167 ரன்கள் எடுத்த அமோல் மஜும்தாருக்கு இந்தியா அழைப்பு வரவே இல்லை. ரன்களை குவித்தாலும், இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காத துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.

மிடில் ஆர்டரில் டிராவிட், லக்ஷ்மண், கங்குலி ஆகியோர் முன்னிலையில் இருந்ததும், பின்னர் வீரேந்திர சேவாக் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோரின் வருகையும் ஒரு திடமான டெஸ்ட் ஜோடியை உருவாக்கியது. தவறான தலைமுறை பிறந்த திறமையான கிரிக்கெட்டர் அன்மோல் மஜும்தார்.

(பட ஆதாரம்: ட்விட்டர்)

பிரக்யான் ஓஜா இந்திய கிரிக்கெட்டின் சிறந்த திறமையாளர்களில் ஒருவராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர். அவரது திறமையைப் பார்த்த MS தோனி பிரக்யனை அணியில் இணைத்துக் கொண்டார். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார்.

தொடர்ச்சியான காயங்கள் மற்றும் மோசமான பார்ம் அவரை அணிக்கு வெளியே அனுப்பியது. அதன்பிறகு அவரால்ல் அணிக்குக் திரும்ப முடிவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அவர் குழு மற்றும் தேர்வாளர்களின் நம்பிக்கையை இழந்தார் என்று சொல்லலாம்.

(பட ஆதாரம்: ட்விட்டர்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link