கவர்ச்சி கடலில் தமன்னா..! இதோ இன்னொரு வெப்சீரிஸிலும் தாராளம்
சைலண்டாக வெப்சீரீஸ் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அதில் படுக்கையறை காட்சிகளில் இதுவரை இல்லாதளவுக்கு நடிப்பில் கிளுகிளுப்பை கொண்டு வந்திருக்கிறார்.
இம்மாத இறுதியில் வெளிவர உள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' என்ற வெப் தொடரில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அத்தொடரைப் பார்ப்பதற்குள்ளாகவே அடுத்து ஒரு வெப் தொடரில் அவர் ஆபாசமாக நடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள 'ஜீ கர்தா' என்ற தொடரில் படுக்கையறைக் காட்சிகளிலும், மேலும் சில கவர்ச்சியான காட்சிகளிலும் தமன்னா மிக தாராளமாக நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு செம ஷாக்.
அத்தொடரின் சில ஸ்கிரீன்ஷாட்டுகளும் வெளிவந்துள்ளதால் தொடரைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 'அடல்ட் ஒன்லி' என்ற அத்தொடரின் டிரைலரில் குறிப்பிட்டிருந்தாலும் கூட ஓடிடியில் வெளியாகி உள்ளதால் அதை 18 வயதுக்குக் கீழானவர்களும் பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது.
ஓடிடி தொடர்களில் ஆபாசத் தொடர்களும், க்ரைம் தொடர்களும்தான் அதிகம் வெளியாகின்றன. கவர்ச்சியாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் தமன்னா இந்த வெப் தொடர்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.