வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளில் நடித்தது ஏன்? என தமன்னா விளக்கம்
)
வருகிற 29ஆம் தேதி அந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் பல அந்தரங்க காட்சிகளில் தமன்னா நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு முன்னதாகவே, ஜி கர்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
)
இதில் நடிகர் சுஹைல் நய்யாருடன், தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
)
இந்த தொடரில் தான் அப்படி நடித்தது ஏன்? என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமன்னா. அதில், இந்தத் தொடரானது பள்ளி பருவத்து காதலை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
அந்த அடிப்படையில் சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கவும், கதை ஓட்டத்தை வலுப்படுத்தவும் அது போன்ற காட்சி அவசியப்பட்டது. ரிலேஷன்ஷிப் கதைகளில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் முக்கியமானவை.
அதன் காரணமாகவே அந்த காட்சியில் என்னால் நடிக்க முடிந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.