Rakul Preet Singh: காதலரை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். இவர், 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமானார்.
தமிழில் இவர் முதன் முதலாக நடித்த படம், யுவன். அதன் பிறகு தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2017ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் குழந்தை தனமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து தமிழில் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடியாக சேர்ந்து நடித்தார். தமிழில் மட்டுமன்றி அவ்வப்போது பாலிவுட்டிலும் தலைக்காட்டி வந்தார், ரகுல்.
ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பகானி என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்தார். இதையடுத்து இவர்களின் திருமணம் தற்போது நடைப்பெற்றுள்ளது.
ரகுல்-ஜாக்கியின் திருமணம், கோவாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைப்பெற்றுள்ளது. சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஜாக்கி பகானி, சில இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களின் தயாரிப்பாளராகவும் சுய தொழில் செய்பவராகவும் உள்ளார்.
ஜாக்கி-ரகுல் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.